வார்த்தைகளை கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்தியிருக்க வேண்டும்-மஹாராஷ்டிரா கவர்னர் குறித்து அமித்ஷா கருத்து

SHARE

மஹாராஷ்டிரா கவர்னர் கோஷ்யாரி, முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதிய கடிதத்தில் வார்த்தைகளை கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்தியிருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா — காங்கிரஸ் — தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில், பல்வேறு கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தாலும், வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்து, மாநில அரசு அறிவிப்பு வெளியிடவில்லை.

இதையடுத்து, முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு, கவர்னர் பி.எஸ்.கோஷ்யாரி, கடிதம் எழுதினார். அதில், ‘முதல்வராக பதவி ஏற்றதும், அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று, உத்தவ் தாக்கரே வழிபட்டார். ஹிந்துத்துவ கொள்கையில் அவ்வளவு பிடிப்புடன் இருந்தவர், திடீரென, மதசார்பற்றவராக மாறிவிட்டாரா… வழிபாட்டு தலங்களை திறக்க, ஏன் உத்தரவிடாமல் இருக்கிறார்’ என, குறிப்பிட்டிருந்தார். இதற்கு உத்தவ் தாக்கரே எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ,அந்த கடிதத்தை நானும் படித்தேன். அவர் சில குறிப்புகளை தெரிவித்துள்ளார். இருப்பினும், வார்த்தைகளை பயன்படுத்துவதில் மிகவும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டிருக்க வேண்டும் என எண்ணுகிறேன் என்றார்.


SHARE

Related posts

Leave a Comment