ஆனந்த் மகேந்திராவின் அடுத்த மனிதாபிமான செயல்.வாய்கால் வெட்டிய விவசாயிக்கு இலவச ட்ராக்டர்

SHARE

பிகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள கொத்திலாவா கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயியான லவுங்கி புய்யான், தனது கிராமத்திற்காக தனி ஒரு ஆளாக முயற்சி செய்து 30 ஆண்டுகளாக 3 கி.மீ. தூரத்திற்கு மலைப்பகுதியில் இருந்து கால்வாய் ஒன்றை வெட்டியுள்ளார்.

இந்த கால்வாய் அங்குள்ள கால்நடைகளுக்கும், வயலுக்கும் பெரும் உதவியாக இருப்பதாக ஊர்மக்கள் கூறி உள்ளனர். இவரது இந்த செயல் சமூக வலைதளங்கள் மூலம் வைரலாகி பலரின் பாராட்டைப் பெற்றது. இதற்கிடையில் இந்த தகவல் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவின் கவனத்திற்கு சென்றுள்ளது.

இதைத் தொடர்ந்து விவசாயி லவுங்கி புய்யான் சேவையை பாராட்டி மஹிந்திரா நிறுவனம் டிராக்டர் ஒன்றை பரிசளித்துள்ளது. இந்த தகவலை ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் அவர், “தனி மனிதராக இவர் அமைத்துள்ள இந்த கால்வாய் பிரமிடுகள் அல்லது தாஜ்மகாலை விட குறைவானது அல்ல” என்று பதிவிட்டுள்ளார்.


SHARE

Related posts

Leave a Comment