பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வேலுாரில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பா.ஜ., மாநிலத்தலைவர் அண்ணாமலை பல்வேறு அரசியல் கணக்குகளை விவரித்தார்
அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடியாது. மாநில கட்சிகளான மம்தா பானர்ஜி, தி.மு.க., போன்றவை தேசிய கட்சியாகும் நோக்கத்தில் உள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்தியாவின் துணைப் பிரதமராகவும், அவர் மகனை தமிழக முதல்வராக்கவும் காய் நகர்த்தி வருகிறார்,என்றார்.
அண்ணாமலையின் இந்த பேச்சு திமுகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடி எதிர்ப்பு அலை தீவிரமாக இருக்கும் என்பது உறுதியான நிலையில் அந்த கட்சியினரே இப்படி முன்மொழிந்திருப்பது வரவேற்க தக்கது என வேலூர் மாவட்ட திமுக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்,