மலேசிய அரசியலில் மீண்டும் திருப்புமுனை

SHARE

News Asia Exclusive

கோலாலம்பூர் செய்தியாளர்

மலேசியா நாட்டின் எதிர்கட்சி தலைவராக உள்ள டத்தோஸ்ரீ அன்வர் இப்ராகிம் நாட்டில் அடுத்த அரசாங்கத்தை அமைக்க தயாராகி விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

கடந்த 7 மாதம் ஆட்சி நடத்தி வந்த தற்போதைய பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் அரசாங்கம் கவிழ்ந்து விட்டதாக இன்று கோலாலம்பூரின் உள்ள நட்சத்திர தங்கும் விடுதியில் பிற்பகல் 12 மணிக்கு ( மலேசிய நேரம் ) நடந்த செய்தியாளர் சந்திப்பில் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராகிம் கூறினார்.

இஸ்லாம் மலாய் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேராதரவுடனும் பிற கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தமது தலைமையில் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என்றும் அன்வர் அறிவித்தார்.

நடப்பு பிரதமர் முகைதீன் யாசினின் தேசிய கூட்டமைப்பு கவிழ்ந்து விட்ட சூழலில் அவர் தாம் அமைக்கவிருக்கும் புதிய ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

குறுகிய காலத்தில் நாட்டின் பேரரசரை சந்தித்து தனது பெரும்பான்மையை நிரூபிக்கப் போவதாகவும் அன்வர் கூறினார். நாட்டின் பொருளாதார மீட்சி, கோவிட்-19 பிரச்சனையை கையாளவும், நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவும் தாம் தான் செயல்படப் போவதாகவும் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.


SHARE

Related posts

Leave a Comment