ரஜினி கட்சிக்கு பாஜகவால் கடனாக கொடுக்கப்பட்ட நபர்- யார் இந்த அர்ஜூன மூர்த்தி ?

SHARE

 ரஜினியின் அரசியல் கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனும்,கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தியும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.


கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அர்ஜுனமூர்த்தி நீண்டகாலமாக முரசொலி மாறனின் அரசியல் ஆலோசகராக இருந்தவர். முரசொலி மாறனின் மறைவுக்குப் பின்னர், தி.மு.க-விலிருந்து விலகிய இவர், தன்னை பா.ஜ.க-வில் இணைத்துக்கொண்டார். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தின் மீது அதிக பற்றுக்கொண்டவர் அர்ஜூன மூர்த்தி, முதலில் பா.ஜ.க-வின் வர்த்தகப் பிரிவில் பதவி வகித்துவந்தவர்.பா.ஜ.க-வின் அறிவுசார் பிரிவின் மாநிலத் தலைவராகப் பதவி வகித்துவந்தார்.  இந்தநிலையில், ரஜினி கட்சியில் இணைந்த அர்ஜுனமூர்த்தி, பா.ஜ.க-வின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்வதாகக் கடிதம் அளித்திருந்தார்.இதெல்லாம் தற்போது தான் நடைபெற்றுள்ளது.

அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக அந்தக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் அறிவித்திருக்கிறார்.

கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அர்ஜுனமூர்த்தி நீக்கப்படுவதாகவும் பா.ஜ.க சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

இது ஒரு நாடகம் என எதிர்கட்சிகள் விமர்சிக்கின்றன. தங்களுடைய ஆட்களை வைத்து ரஜினியை இயக்க பாஜக போட்டுள்ள திட்டம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.


இவரின் மனைவி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பள்ளித் தோழி. டெல்லி, தமிழக பா.ஜ.க தலைமையுடன் நெருக்கமாக இருந்த இவர், பல்வேறு தொழில்களையும் நடத்திவருகிறார்.
தற்போது நடிகர் ரஜினிகாந்த்தின் டுவிட்டர் பக்கம் உட்பட அவரின் அனைத்து தொழில்நுட்பப் பிரிவுகளையும் அர்ஜுனமூர்த்தியின் குழுதான் கவனித்துவருகிறது

ஏற்கனவே பாஜக மற்றும ரஜினிக்கு பாலமாக மூர்த்தி சேயல்பட்டு வந்துள்ளார் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

கருணாநிதியின் மனசாட்சி என வருணிக்கப்பட்ட முரசொலி மாறனுக்கு நெருக்கமாக இருந்ததால் திமுக குறித்தும் கலாநிதி மாறன் தொழில்கள் பற்றியும் நன்கு அறிந்தவர் என்பதால்,திமுகவை மடக்கவும்,ரஜினியை கைக்கு அடக்கமாக வைக்கவும் பாஜக நகர்த்திய காய் இது என தெரிகிறது என அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


SHARE

Related posts

Leave a Comment