ஐ.நா., பொதுச் செயலர் பதவி- இந்திய பெண் போட்டி

SHARE

ஐ.நா., பொதுச் செயலர் பதவிக்கு, இந்தியாவில் பிறந்து, கனடாவில் வசிக்கும், 34 வயது அரோரா அகன் ஷா, போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

2017ல், ஐ.நா., பொதுச் செயலராக, ஆன்டோனியோ குட்டரஸ் பதவியேற்றார். இவரது பதவிக் காலம், இந்தாண்டு டிச., 31ல் நிறைவடைகிறது. அவர், மீண்டும் பொதுச் செயலர் பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஐ.நா., வளர்ச்சித் திட்ட கணக்கு தணிக்கை அமைப்பாளராக உள்ள அரோரா அகன் ஷா, பொதுச் செயலர் பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர், சமூக வலைதளத்தில், பிரசாரத்தையும் துவக்கி விட்டார். அதில் தன்னைப் போன்ற பெண்கள், அதிகாரமிக்க தலைமை பொறுப்பிற்கு வருவதில்லை. தங்களுக்கான காலம் வரும் வரை காத்திருக்கின்றனர் என தெரவித்துள்ளார்.


SHARE

Related posts

Leave a Comment