கொரோனா தடுப்பூசி மருந்து 1,000 ரூபாய்- ‘சீரம்’ நிறுவனம் அறிவிப்பு

SHARE

ஆக்ஸ்போர்டு பல்கலை உருவாக்கி உள்ள, கொரோனா தடுப்பூசி மருந்து, 1,000 ரூபாய்க்கு வினியோகிக்கப்படும், என, ‘சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா’ நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி அதார் பூனவல்லா நேற்று தெரிவித்தார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ‘ஆஸ்ட்ரா ஜெனகா’ நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பூசி மருந்தின் பரிசோதனைகள், இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. இதுவரை நடந்துள்ள பரிசோதனைகளின்படி, இந்த மருந்து, வயதானோருக்கு நல்ல பலன் தருவதாக தெரியவந்துள்ளது.

நம் நாட்டில், இந்த தடுப்பூசி மருந்தை தயாரிக்கும் உரிமத்தை, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது.

இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் பேசிய , சீரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி அதார் பூனவல்லா,
தடுப்பூசி மருந்தின், இறுதிகட்ட பரிசோதனை முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளன. பரிசோதனை முடிவுகள், ஒழுங்குமுறை ஒப்புதல்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படை யில், மக்களுக்கு இரண்டு ‘டோஸ்’ தடுப்பு மருந்து, 1,000 ரூபாய்க்கு வினியோகிக்கப்படும்.அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள், சுகாதார ஊழியர்களுக்கும், வயதானோருக்கும் தடுப் பூசி கிடைத்துவிடும்.

ஏப்ரலுக்குள், பொது மக்கள் அனைவருக்கும் கிடைத்துவிடும். அனைத்து இந்தியர்களுக்கும் தடுப்பு மருந்து கிடைக்க, மூன்று ஆண்டுகள் வரை ஆகும். .இந்த தடுப்பூசி மருந்தால் பாதிப்புகள் ஏற்பட்டதாக, எந்த புகார்களும் இதுவரை எழவில்லை.

இந்தியாவில் செய்யப் பட்ட பரிசோதனை களின் முடிவுகள், ஒன்றரை மாதங்களில் கிடைத்துவிடும். அதை வைத்து, தடுப்பூசி மருந்தின் செயல்திறனை, நாம் அறிந்துகொள்ளலாம் என்றார்.


SHARE

Related posts

Leave a Comment