சவுதி அரேபியாவில் உள்ள ஆபா விமான நிலையத்தில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டுரோன் மூலம் நடத்திய தாக்குதலில் 8 பேர் காயமடைந்தனர்.
ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி விமானப்படையினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பலி எடுக்கும விதமாக ஹவுதி அமைப்பினர், ஆபா விமான நிலையத்தை நோக்கி டுரோன்களை ஏவினர். அதில் ஒன்றை தடுத்து அழித்துவிட்டதாக சவுதி விமானப்படையினர் அறிவித்தனர்.
ஆனால், மற்றொரு டுரோனால் விமான நிலையத்தில் பாதிப்பு ஏற்பட்டது. 8 பேர் காயமடைந்தனர். பயணிகள் விமானம் ஒன்று சேதமடைந்தது. இந்த தாக்குதலுக்கு ஹவுதி அமைப்பினர் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், அந்த அமைப்பினர் தான் சவுதியில் டுரோன் மூலம் தாக்குதல் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். சவுதி இஸ்லாமியர்களின் புனித பூமி என்பதால் தீவரிவாத இயக்கங்கள் பெரும்பாலும் சவுதி அரேபியா மீது கை வைப்பதில்லை ஆனால் இந்த தாக்குதல் சவுதியை கலக்கமடைய வைத்துள்ளது.