புதிய கட்சிக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் கேட்கும் ரஜினி

SHARE

uஜினி துவங்க உள்ள கட்சி மக்கள் சேவை கட்சி என தெரியவந்துள்ளது மாநிலத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் களமிறங்க  வேட்பாளர்களுக்கு பொதுவான தேர்தல்  சின்னத்தை ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம்  மக்கள் சேவை  கட்சி விண்ணப்பித்து உள்ளது.


விண்ணப்பத்தில்  ரஜினிகாந்தின் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால்  வேறு நபர்மூலம் விண்ணப்பம் அளிக்கப்பட்டு உள்ளது.  தேர்தல்  சின்னத்திற்கான முதல் விருப்பமாக ரஜினிகாந்த் தனது 2002 திரைப்படமான பாபாவில் புகழ் பெற்ற ‘இரு விரல்’ பாபா முத்திரையை பட்டியலிடப்பட்டு உள்ளது, அதே நேரத்தில் அவரது ‘பாஷா’ படத்தை நினைவூட்டும்‘ ஆட்டோ ரிக்‌ஷாவை  இரண்டாவது முன்னுரிமை சின்னமாக பட்டியலிடப்பட்டுள்ளது.
. ரஜினிகாந்த் கேட்டுள்ள ‘இரு விரல்’சின்னம் காங்கிரஸின் ‘கை’ சின்னத்துடன் ஒத்திருப்பதால், மக்கள் சேவை கட்சிக்கு  ‘இரு விரல்’ வாக்கெடுப்பு சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
ஆட்டோ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.


SHARE

Related posts

Leave a Comment