அயோத்தியில் ராமர் கோயில் – இதுவரை ரூ.1,511 கோடி நன்கொடை வசூல் – அறக்கட்டளை பொருளாளர் தகவல்

SHARE

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், மத்திய அரசு ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையில் பங்கேற்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்டுவதற்காக பொது மக்களிடம் நன்கொடைகள் பெறப்பட்டு வருகிறது. இதுவரை மக்களிடம் பெறப்பட்டுள்ள நன்கொடை குறித்து ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி, நேற்று குஜராத் மாநிலம் சூரத் நகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது , “மக்கள் ராமர் கோயில் கட்டுவதற்கு தங்களால் முடிந்த நன்கொடைகளை வழங்கி வருகிறார்கள். 492 ஆண்டுகளுக்குப்பின் மக்கள் மீண்டும் மிகப்பெரிய தர்மத்தைச் செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுவரை ராமர் கோயில் கட்டுவதற்கு ரூ.1,511 கோடி நன்கொடையாக அறக்கட்டளை திரட்டியுள்ளது” என தெரிவித்தார்.


SHARE

Related posts

Leave a Comment