தனியாக செல்லும் வாகன ஓட்டிகள் முக கவசம் அணிய தேவையில்லை- பெங்களூரு மாநகராட்சி அறிவிப்பு

SHARE

பெங்களூருவில் கொரோனா பரவல் அதிகம் இருந்த போது,வாகன ஓட்டிகள் முக கவசம் அணிவதில் சில தளர்வுகளை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி, இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட வாகனங்களில் ஒருவர் மட்டும் சென்றால் முக கவசம் அணிய தேவையில்லை. அவர்கள் முக கவசம் அணியாமல் வாகனங்களை ஓட்டி செல்லலாம்.

அதே நேரத்தில் இருசக்கர வாகனத்தின் பின்னால் யாராவது அமர்ந்திருந்தால், 2 பேரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்.

காரில் டிரைவருடன், பிற பயணிகள் இருந்தால் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் , இல்லையெனில் அபராதம் வசூலிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. மாநகராட்சியின் இந்த அறிவிப்புக்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்திலும் இதே நடை முறையை பின்பற்ற மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்


SHARE

Related posts

Leave a Comment