பீகார் சட்டசபை தேர்தல்- இன்று தேதி அறிவிக்க வாய்ப்பு

SHARE

பீகாரில் முதல் மந்திரி நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.  இந்த கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து உள்ளது.  இந்நிலையில், 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு வருகிற அக்டோபரில் தேர்தல் நடத்தப்பட கூடும் என கூறப்படுகிறது.


இந்திய தலைமை தேர்தல் ஆணையம் டெல்லியில் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்த இருக்கிறது என ஆணையத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பு அதிகாரி ஷெபாலி சரண் தெரிவித்து உள்ளார்.  இதில் பீகார் சட்டசபை தேர்தல் பற்றி அறிவிப்பு வெளியாக உள்ளது.

இந்த தேர்தலை முன்னிட்டு கடந்த சில நாட்களாக மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.

சமீபத்தில் மிகப்பெரிய பாலம் ஒன்றை பிரதமர் மோடி துவக்கிவைத்தார்.மேலும் பல சலுகைகளையும் அந்த மாநிலத்திற்கு மாடி அறிவித்தார்.

பீகாரில் பொதுமக்களிடையே கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தேர்தலை பாதுகாப்புடன் நடத்துவது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய தேவையாக உள்ளது.
குறிப்பிடத்தக்கது


SHARE

Related posts

Leave a Comment