கொரோனா தடுப்பூசி உற்பத்தி, இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்

SHARE

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி திறன்கள் முக்கிய பங்கு வகிக்கும் என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

கிராண்ட் சேலஞ்ச்ஸ் என்ற அமைப்பின் வருடாந்திர கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் ,கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்தியா தனது மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதால் இந்தியா மிகவும் ஊக்கமளிக்கிறது என்றார்.


இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு முக்கியமானதாக இருக்கும்.பெரிய அளவில் கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என கூறினார்.


SHARE

Related posts

Leave a Comment