தடுப்பு மருந்து உற்பத்தி, இந்தியா உதவ வேண்டும் – பில்கேட்ஸ்

SHARE

தடுப்பு மருந்து உற்பத்தியில் இந்தியா முன்னணியில் உள்ளது. இதனால், கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி செய்வதில் இந்தியாவின் ஒத்துழைப்பு உலக நாடுகளுக்கு தேவை என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தடுப்பு மருந்து உருவாக வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர். கொரோனாவுக்கான தடுப்பு மருந்து அடுத்த ஆண்டு இந்தியாவில் அதிகளவு உற்பத்தி செய்யப்பட வாய்ப்புகள் இருக்கிறது


அந்த மருந்து பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். . அவ்வாறு உற்பத்தி செய்யும் போது, அது அதிகளவில் இருக்கும். அடுத்த ஆண்டின் முதல்காலாண்டில், பல கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிடும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

உலக நாடுகள் பலவற்றில் நடந்து வரும் கொரோன தடுப்பு மருந்து ஆய்வுகளுக்கு பில்கேட்ஸ் பல ஆயிரம் கோடிகளை செலவு செய்திருக்கிறார். இந்தியாவில் உள்ள பாரத் பயேடெக் நிறுவனத்திற்கும் 100 கோடி ரூபாய்க்கு மேல் பில்கேட்ஸ் நிதி உதவி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது..


SHARE

Related posts

Leave a Comment