அமெரிக்காவில் இரண்டு லட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்பு-பில் கேட்ஸ் எச்சரிக்கை

SHARE

அமெரிக்காவில், அடுத்த ஆறு மாதங்களில், கொரோனாவால், கூடுதலாக இரண்டு லட்சம் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது, என, பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவில், கொரோனா வைரசால், 1.63 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை, மூன்று லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கி, அவற்றை வினியோகிப்பதற்கு, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மிலிண்டா கேட்ஸ் இணைந்து நிர்வகிக்கும் அறக்கட்டளை, 735 கோடி ரூபாய்க்கும் அதிகமான நன்கொடை வழங்கி உள்ளது.

இந்தநிலையில், பில் கேட்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், கொரோனா வைரசை, அமெரிக்கா சிறந்த முறையில் எதிர்க்கொள்ளும் என நினைத்தேன். எனினும், அடுத்த, நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு, வைரசின் பாதிப்பு, மிக மோசமாக இருக்கும். ஐ.எச்.எம்.இ., எனப்படும், சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடு நிறுவனத்தின் கணிப்புப்படி, அமெரிக்காவில் கூடுதலாக, இரண்டு லட்சம் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற வழிமுறைகளை பின்பற்றினால், அதிக உயிரிழப்புகளை தவிர்க்க முடியும். கடந்த, 2015ல், இதுபோன்ற தொற்று வரும் என, கணித்தேன். எனினும், அதைவிட மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. வைரஸ் காரணமாக, அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த, நானும், தடுப்பூசியை எடுத்துக் கொள்வேன்.


SHARE

Related posts

Leave a Comment