‘பிட்காய்ன்’ அதிகரிக்கும் மதிப்பு- அதிகரிக்கும் முதலீடு

SHARE

மெய்நிகர் நாணயமான, ‘பிட்காய்ன்’ மதிப்பு, இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி, 1 பிட்காய்ன் விலை, இந்திய மதிப்பில், 17.03 லட்சம் ரூபாய் என்ற உயரத்தை எட்டியிருக்கிறது.

நடப்பு ஆண்டில் மட்டும், இதன் மதிப்பு 220 சதவீதம் அதிகரித்துள்ளது. விரைவில், 4 லட்சம் டாலர் அதாவது, இந்திய மதிப்பில், 2.96 கோடி ரூபாயை
எட்டும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இதற்கிடையே, சில்லரை முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முடியாத உயரத்துக்கு சென்றுவிட்டது, பிட்காய்ன்.


கொரோனா காலத்தில், தங்கம், பங்குச் சந்தை ஆகியவற்றில் அதிக ஏற்ற – இறக்கங்கள் இருந்த நிலையில், பிட்காய்ன் மீதான முதலீடு அதிகரித்து உள்ளது.


SHARE

Related posts

Leave a Comment