மம்தா கட்சியில் மேலும் ஒரு பா.ஜ., எம்.எல்.ஏ.,

SHARE

மேற்கு வங்கத்தில் பா.ஜ.,வில் இணைந்து, எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிஸ்வஜித் தாஸ், ஆளும் திரிணமுல் காங்கிரசுக்கு மீண்டும் திரும்பினார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ், அரசு அமைந்துள்ளது. சட்டசபைக்கு கடந்த மார்சில் தேர்தல் நடந்தது. அதற்கு முன் திரிணமுல் கட்சியைச் சேர்ந்த பலர் பா.ஜ.,வில் இணைந்தனர்.சட்டசபை தேர்தலில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வென்ற முகுல் ராய், மீண்டும் திரிணமுல் காங்கிரஸ்சில் ஜூனில் இணைந்தார். மற்றொரு எம்.எல்.ஏ.,வான தன்மே கோஷ், கடந்த சில தினங்களுக்குமுன் திரிணமுல் காங்.,குக்கு திரும்பினார்.
இந்நிலையில், மற்றொரு எம்.எல்.ஏ.,வான பிஸ்வஜித் தாஸ், திரிணமுல் காங்கிரசில் இன்று மீண்டும் இணைந்தார். சட்டசபை தேர்தலில் பா.ஜ., 77 இடங்களில் வென்றது. தற்போது அதன் பலம் 72 ஆக குறைந்துள்ளது.


SHARE

Related posts

Leave a Comment