சம்பளம் போதவில்லை-இங்கிலாந்து பிரதமர் புலம்பல்

SHARE

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலக திட்டமிட்டுள்ளதாக கன்சர்வேடிவ் கட்சி எம்.பி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். பிரதமர் பதவி மூலம் கிடைக்கும் சம்பளம் போதவில்லை என போரிஸ் உணர்வதாகவும், இதன் காரணமாக அவர் பதவி விலகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போரிஸ் ஜான்சன் தற்போது ஆண்டிற்கு 1 லட்சத்து 50,402 யூரோ சம்பளம் வாங்குகிறார்.அந்த சம்பளம், அவரது முந்தைய பணி சம்பளதை ஒப்பிடுகையில் மிகவும் குறைவானதாக இருப்பதாக தி டெய்லி மிர்ரர் செய்தி வெளியிட்டுள்ளது.
போரிஸ் ஜான்சனுக்கு 6 குழந்தைகள் உள்ளனர், அவர்களில் சிலர் குழந்தைகள் என்பதால் அவர்களின் செலவை போரிஸ் கவனித்து கொள்கிறார்.அதோடு, விவாகரத்தான முதல் மனைவிக்கு ஜீவனாம்சம் தர வேண்டியுள்ளதால் போரிஸ் கடும் நிதி நெருக்கடியில் இருக்கிறார்.எனவே அடுத்த 6 மாதத்தில் பதவி விலக தீர்மானித்துள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கட்சியின் தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்பு போரிஸ் பிரபல பத்திரிகை ஒன்றில் பணியாற்றி வந்தார்.அப்போது, அவர் ஆண்டிற்கு 2 லட்சத்து 75 ஆயிரம் யூரோ சம்பளம் வாங்கியுள்ளார்.

மேலும், மாதத்தில் இரண்டு சொற்பொழிவாற்றி மாதத்திற்கு 1 லட்சத்து 60 ஆயிரம் யூரோ சம்பாதித்து வந்துள்ளார்.
இதனால், போரிஸ் பிரதமர் பதவியை ராஜினாமா செய்து தனது முந்தைய பத்திரிகை பணிக்கே திரும்பப் போவதாகவும் கூறப்படுகிறது.



SHARE

Related posts

Leave a Comment