இந்தியா, பிரிட்டன் இடையேயான ஆறாவது சர்வதேச தொழில்நுட்ப மாநாடு டில்லியில் நடக்கிறது. இதில் ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையில் பங்கேற்ற பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் :இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு இயற்கையாகவே அமைந்த ஒன்று; நாம் இயற்கையான கூட்டாளிகள் என்றார்.
தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.தொழில்நுட்ப வளர்ச்சியில் இணைந்து முன்னேற்றம் காண்பதற்காக, இந்தாண்டு மே மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி 2030ம் ஆண்டு வரையிலான திட்டங்களை உருவாக்க பாதை வகுக்கப்பட்டுள்ளது.
‘5ஜி’ தொழில்நுட்பம் உட்பட தொலை தொடர்பு துறையில் கூட்டாக செயல்பட்டு வருகிறோம். மேலும் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் வாயிலாக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த
உள்ளோம்.செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட எதிர்காலத்தை மாற்றியமைக்கக் கூடிய அனைத்து தொழில்நுட்பங்களிலும் இணைந்து செயல்படவே, நண்பர் மோடியுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.