தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது

SHARE

 தமிழகம் முழுவதும் அரசு பஸ் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப்போராட்டம் தொடங்கியது.
தொ.மு.ச. சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 9 தொழிற்சங்க கூட்டமைப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
ஊதிய உயர்வு, நிலுவைத்தொகை, உள்ளிட்டவற்றை வலியுறுத்தி அரசு பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள் வழக்கதை விட சற்று குறைந்த அளவில் இயக்கப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளும் பஸ் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது .

இந்த போராட்டத்தால் குறைந்த அளவு பேருந்துகளே இயக்கப்படுகின்றன.


SHARE

Related posts

Leave a Comment