பஸ் போராட்டம் வாபஸ்

SHARE

சென்னை: அரசு பஸ் ஊழியர்கள், தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது

அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான, புதிய ஊதிய ஒப்பந்தம் போடப்படாததால், இரண்டு நாட்களாக, பஸ்களை நிறுத்தி, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால், பணிக்குச் செல்வோர், மாணவர்கள், நோயாளிகள் என, பல தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். .


இந்நிலையில், சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள, தொழிலாளர் கமிஷனர் அலுவலகத்தில், இன்று மாலை முத்தரப்பு பேச்சு நடந்தது. தொழிலாளர் நலத்துறை இணை கமிஷனர் லட்சுமி காந்தன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.
இதனை தொடர்ந்து, புதிய ஆட்சி அமைந்ததும் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த போவதாகவும், அதுவரை தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்று கொள்வதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.


SHARE

Related posts

Leave a Comment