கர்நாடக அரசு போக்குவரத்து கழகம், பெங்களூரு சர்வதேச விமான ஆணையம் இணைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த அரசு பேருந்தை 12 லட்சம் ரூபாய் செலவில் அதிநவீன பொது கழிவறையாக மாற்றியுள்ளது.
இது பெண்கள் பயன்பாட்டுக்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த பேருந்து பெங்களூரு கெம்பேகவுடா பேருந்து நிலையத்தின் முனையம் 1-ல் நிறுத்தப்பட்டு உள்ளது.
இந்த பேருந்தில் 5 கழிவறைகள் உள்ளன. . மேலும், சென்சார் விளக்குகள், கைகழுவும் வசதி, குழந்தைகளுக்கு பால் புகட்டும் அறை, குழந்தைகளுக்கு உடை மாற்றும் அறை உள்ளது. இது பெண்களின் வசதிக்காக அமைக்கப்பட்டு உள்ளது.