கனடாவில் அக்டோபர் 31ம் தேதி வரை பயணத் தடை

SHARE

கனடாவில் அக்டோபர் 31ம் தேதி வரை பயணத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது..

கனடாவில் இதுவரை 1,58,758 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,34,971 பேர் குணமடைந்துள்ளனர். 9,297 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த கனடா தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அபராதமும், சிறைத் தண்டனையும் விதித்து வருகிறது.


இந்நிலையில், கனடா வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், ‘கனடாவில் கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக அக்டோபர்., 31ம் தேதி வரை வெளிநாட்டினருக்குப் பயணத் தடை நீட்டிக்கப்படுகிறது. இதில் அமெரிக்காவுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்காலிகப் பணியாளர்களுக்கு இதில் விலக்கு கொடுக்கப்படுகிறது’ என அந்நாட்டு வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.


SHARE

Related posts

Leave a Comment