மத்திய அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இலவசமாக இதுவரை 25,60,08,080 கோவிட் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு உள்ளன. அதில், 24,44,06,096 தடுப்பூசிகள் இதுவரை உபயோகிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கையிருப்பில் 1,17,56,911 தடுப்பூசிகள் உள்ளன. மேலும், மாநிலங்களுக்கு 38,21,170 தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு உள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.