திமுக அட்வைசர் பிரசாந்த் கிஷோர் பாண்டேவுக்கு வருமான வரித்துறை மூலம் செக்

SHARE

தி.மு.க.,வின் தேர்தல் ஆலோசகராக செயல்படும் பிரசாந்த் கிஷோர் மீதான, வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக, வருமான வரித்துறை விசாரணை நடத்த உள்ளது.

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெறுவதற்கான வியூகத்தை வகுத்துக் கொடுக்கும் பொறுப்பை, பிரசாந்த் கிஷோரின், ‘ஐபேக்’ நிறுவனம் மேற்கொண்டுள்ளது. தி.மு.க., வேட்பாளர் பட்டியல் துவங்கி, பல்வேறு விஷயங்களில், இந்நிறுவனம் செயலாற்றி வருகிறது.

இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் மீது, வருமான வரி துறைக்கு, வரி ஏய்ப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தவும், அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரசாந்த் கிஷோர் மீது, டில்லியில் உள்ள வருமான வரி புலனாய்வு பிரிவு இயக்குனர் ஜெனரல் அலுவலகத்தில், சென்னை, அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த, டி.ராமாராவ் மற்றும் ஆர்.முருகேசன் ஆகியோர், வரி ஏய்ப்பு புகார் தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனு தொடர்பாக விசாரணை நடத்த, சென்னையில் உள்ள, வருமான வரி புலனாய்வு துறைக்கு, டில்லியில் இருந்து கடிதம் வந்துள்ளது. புகார் தொடர்பாக, வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள், விசாரணை மேற்கொள்ள உள்ளனர். விசாரணை முடிவில், வரி ஏய்ப்பு செய்துள்ளாரா; அதில் தி.மு.க., தொடர்பு இருக்கிறா என்பது குறித்து தெரியவரும். என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


SHARE

Related posts

Leave a Comment