கடந்த பல நாட்களாக இல்லாத வகையில் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கு சற்று உயர்ந்து வருகிறது.
கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் 1000திற்கும் கீழாக இருந்த எண்ணிக்கை தற்போது சற்று உயர்ந்து ஆயிரத்திற்கு மேல் சென்று வருகிறது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,995பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சென்னையில் இன்று 1,282பேர்கள் பாதிப்பு. எனவே, தமிழகத்தில் மொத்தம் பாதிப்பு 3,67,430ஆக உயர்ந்துள்ளது.
. மேலும், இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை 5,743. இது வரை குணமானவர்களின் எண்ணிக்கை 3,07,677ஆக உயர்வு. இது வரை பலி எண்ணிக்கை 6,340ஆக உயர்ந்து உள்ளது. மேலும், இன்று மட்டும் ஒரே நாளில் 101பேர் பலியாகி உள்ளனர்.
சென்னையில் மட்டும் 1,22,757பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்- இது வரை, தமிழகம் முழுவதும் 40,62,943பேருக்கு தொற்று சோதனை செய்யப்பட்டு உள்ளது. இன்று
மட்டும், 72,423 பேருக்கு பரிசோதனை செய்து உள்ளனர்