சென்னையின் விடிய விடிய கனமழை – விமான சேவை பாதிப்பு

SHARE

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் நேற்று நள்ளிரவில் இருந்து இன்று அதிகாலை வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. 
 மயிலாப்பூர், ராயப்பேட்டை, அடையார், வேளச்சேரி, நந்தனம், தியாகராய நகர் உள்பட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்துள்ளது.
சென்னை பலவேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
மழை காரணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. துபாயில் இருந்து 133 பயணிகளுடன் அதிகாலை 2.40 மணிக்கு சென்னை வந்த எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானமும் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திரும்பி அனுப்பப் பட்டது. மேலும் அதிகாலை 3.10 மணிக்கு துபாயில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், அதிகாலை 3.25 மணிக்கு கொழும்பில் இருந்து வந்த ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானம் ஆகியவை சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானிலே வட்டமடித்து பறந்து கொண்டிருந்தன. வானிலை சீரானதும் விமானங்கள் தரையிறங்கின.
சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களான சிங்கப்பூா், துபாய், சாா்ஜா, தோகா, குவைத், ஹாங்காங், கொழும்பு உள்ளிட்ட 9 பன்னாட்டு விமானங்கள் சுமாா் 3 மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக புறப்பட்டு சென்றன. அதிகாலை 4 மணிக்கு மேல் மழை ஓய்ந்ததும் பெங்களூா் சென்ற விமானங்கள் சென்னைக்கு திரும்பி வந்தன.
சென்னையில் நள்ளிரவில் பெய்த திடீா் மழையால் சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு விமான சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் கடும் அவதியடைந்தனா்.


SHARE

Related posts

Leave a Comment