பிபிசி செய்தி சேனலுக்கு சீனாவில் தடை : இங்கிலாந்து கண்டனம்

SHARE

சீனாவில் பிபிசி செய்தி சேனலுக்கு விதிக்கப்பட்ட தடை ஏற்றுக்கொள்ள முடியாதது என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.


சீனாவில்தான் முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அங்கிருந்துதான் உலக நாடுகளுக்கு அது பரவியது என குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் சீனா இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது.

தற்போது உலக வல்லுநர்கள் சீனாவில் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அதேபோல் ஜிங்ஜியாங் மாகாணத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக அடக்குமுறையை கையாண்டு வருவதாக குற்றச்சாட்டும் உள்ளது.

இதற்கிடையே, கொரோனா வைரஸ் தொற்றை சீனா கையாண்ட விதம், ஜிங்ஜியாங் பிரச்சினை குறித்து தவறான செய்திகளை பிபிசி உலக செய்தி ஒளிபரப்பியதாக சீனா குற்றம்சாட்டியது. இதையடுத்து, பிபிசி செய்தி ஒளிபரப்புக்கு சீனா தடை விதித்தjது. 

சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இங்கிலாந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர்டொமினிக் ராப் “ சீனாவின் நடவடிக்கை கருத்து ஊடக சுதந்திரத்திற்கு எதிரானது” என தெரிவித்துள்ளார். இதேபோல், அமெரிக்காவும் சீனாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. 


SHARE

Related posts

Leave a Comment