ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து அந்நாட்டை தலீபான்கள் கைப்பற்றியுள்ளன. மேலும், ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளை தலீபான்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் சிக்கியுள்ள தங்கள் நாட்டை சேர்ந்தவர்களை மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.
ஆப்கானிஸ்தானில் இருந்து ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் அமெரிக்க படைகள் வெளியேறிவிட வேண்டும் இல்லையே விளைவுகளை சந்திக்க நேரிடும் என தலீபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள அமெரிக்கர்களை மீட்புபணிகள் கூடுதல் கால அவகாசம் தேவைப்படலாம் என தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் கத்தாரில் உள்ள தலீபான்களின் அரசியல் அலுவலகத்தின் துணைத் தலைவர் அப்துல் சலாம் ஹனாபி, ஆப்கானிஸ்தானுக்கான சீனத் தூதர் வாங் யூவை காபூலில் சந்தித்ததாக தலீபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அவர்கள் சீன தூதரகம் மற்றும் மந்திரிகளின் பாதுகாப்பு, ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை, இருதரப்பு உறவுகள் மற்றும் சீனாவின் மனிதாபிமான அடிப்படையிலான உதவி பற்றி விவாதித்ததாக தெரிகிறது.