ஆசாத் அவுட் – சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை

SHARE

சிறப்பு கட்டுரை – உமாபதி கிருஷ்ணன்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

திடீரென ஏன் இந்த முடிவு . நீண்ட காலமாக கட்சியின் விசுவாசியாக இருந்த அவர் ஏன் நீக்கப்பட்டார்.?

குலாம் பற்றிய சிறு குறிப்பை பார்த்துவிட்டு தொடர்தால் தெளிவாக இருக்கும்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சற்று வசதியான குடும்பத்தில் பிறந்து குலாம் நபி சிறு வயதியே பரபரப்பாக இயங்கியவர்.கல்லூரி படிப்பை முடித்தவுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்த குலாம் நபி ஆசாத்திற்கு குறுகிய காலத்தில் பெரிய வெற்றி காத்திருந்தது.

மன்னர் குடும்பத்தை சேர்ந்த பரூக் அப்துல்லா ஒரு அசைக்க முடியாத ஹீரோவாக வலம் வர அவரை எதிர்கொள்ள குலாம் நபி ஆசாத் போன்ற வேகமாக செயல்படும் இளைஞர்கள் காங்கிரஸ் கட்சிக்கு தேவைபட்டனர்

1980 களின் துவக்கம் குலாம் நபி ஆசாத்திற்கு பொற்காலமாக அமைந்தது. 1973ல் கட்சியில் இணைந்த ஆசாத் 5 வருடங்களில் மாநில அளவில் பதவியை பிடித்தார். மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவரானார்.

1980ல் அம்மையார் இந்திராவின் நன் மதிப்பை பெற்று அகில இந்திய அளவில் பதவிகளை பெற்றார். அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவரானார்.உடனடியாக இவருக்கு தொடர்பே இல்லாத மகாராஷ்ட்டிர மாநிலத்தில் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

வெற்றியை தொடர்ந்து மத்திய அமைச்சரானார். இப்படி காங்கிரஸ் அவரை வேகமாக வளர்த்து விட்டது.

பின்னர் ராஜிவ் ஆட்சியில் அமைச்சர் மன்மோகன் ஆட்சியில் அமைச்சர் என வளர்ந்த அவர் கலவர பூமியான ஜம்மு காஷ்மீரில் வளம் கொழிக்கும் மனிதிராக மாறிபோனார்.

ஒரு ஒடுக்கப்பட்ட மாநிலம் என சொல்லப்படும் மாநிலத்தில் இருந்து வந்த குலாம் நபி ஆசாத் இந்த இந்திய நாட்டின் பிற மாநிலங்கள் மற்றும் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு எதாவது செய்திருக்கிறார் என்று, எதையும் குறிப்பிட்டு சொல்லி விட முடியாது.

காஷ்மீர் அரசியல் காங்கிரஸ்கட்சியின் மூத்த தலைவர் மற்றும் தனது சுயலாப அரசியல் என மட்டும் வலம் வந்த குலாம் நபி ஆசாத்திற்கு கடந்த ஆண்டு துவங்கியது பிரச்சனை. காஷ்மீரை மூன்றாக பிரித்தது பாஜக அரசு. காஷ்மீர் அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

ஆசாத்தும் அதிலிருந்து தப்பவில்லை. கோடிக்கணக்கில் அவர் சேர்த்த சொத்துக்கள் முடங்கின. இங்கு தான் துவங்கியது பிரச்சனை அவருக்கு அடுத்தடுத்து செக் வைத்தது பாஜக அரசு.

ஆனால் தனிப்பட்ட அவர் பிரச்சனைக்கு காங்கிரஸ் தலைமை முகம் கொடுக்கவில்லை.இதனால் ஆத்திரத்தில் இருந்த குலாம்நபி ஆசாத் மெல்ல பாஜக பக்கம் சாயத்தொடங்கினார். நேரடியாக அந்த கட்சியை ஆதரிக்காமல் உட்கட்சியில் பிரச்சனையை தூண்ட துவங்கினார்.

ஒரு கட்டத்தில் ராகுல் சோனியா ஆகியோரை எதிர்த்து அரசியல் செய்ய ஆரம்பித்தார். இவர் தனது சுய லாபத்திற்காக பாஜக பக்கம் மெல்ல சாய்ந்து வருவதாக அறிந்து கொண்டார் ராகுல்.

கட்சிக்குள் உள்ள சில பிரச்சனைகளால் லேசான அதிருப்தியில் இருந்தவர்களை மெல்ல உசுப்பி விட்டார் குலாம். அதன் வெளிப்பாடு தான் காங்கிரசுக்கு நிரந்தர தலைவர் நியமிக்கப்பட வேண்டும்; கட்சியின் காரிய கமிட்டியில் மாற்றம் கொண்டு வர வேண்டும்’ எனக்கோரி, கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாவுக்கு, குலாம் நபி ஆசாத் உட்பட, 23 தலைவர்கள் கடிதம் எழுதினர்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்களுக்கு, காங்கிரஸ் எம்.பி., ராகுல் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் காரிய கமிட்டியை, இடைக்கால தலைவர் சோனியா மாற்றி அமைத்துள்ளார்.

இது பற்றி, காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ,காங்கிரஸ் பொதுச் செயலர்களாக இருந்த குலாம் நபி ஆசாத், அம்பிகா சோனி, மோதிலால் வோரா, லுசின்ஹோ பலிரியோ, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.

எனினும், காங்கிரஸ் காரிய கமிட்டியின் உறுப்பினராக, குலாம் நபி ஆசாத் நீட்டிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் காரிய கமிட்டியின் உறுப்பினர்களாக, சிதம்பரம், ஜிதேந்திர சிங், தாரிக் அன்வர், ரந்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் மீண்டும் நியமிக்கப்பட்டுஉள்ளனர். . தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராக, தமிழக எம்.பி., மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். ஒடிசா மாநில பொறுப்பாளராக, தமிழக எம்.பி., செல்லகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் சிறப்பு விமானத்தில் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார் சோனியா,அவருக்கு துணையாக ராகுலும் சென்றிருக்கிறார்.சோனியா ராகுல் இருவரும் நாட்டில் இல்லாத நிலையில்,தலைவரே இல்லாத கட்சி எப்படி இயங்கும் எனவும் தொண்டர்கள் கவலை அடைந்துள்ளனர்.

பிரியங்காவை நிரந்தர தலைவராக நியமிக்க வேண்டும் எனவும் ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இப்படி கட்சிக்குள் மாற்றங்களை செய்தாலும் வலுவான நிரந்தர தலைவர் இருந்தால் மட்டுமே காங்கிரஸ் பிழைக்க முடியும் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.


SHARE

Related posts

Leave a Comment