தமிழக அரசியல் நடவடிக்கையை சீர்குலைக்க பா.ஜ.,வை வளர்த்தெடுக்க பகடைக்காயாக ரவி நியமிக்கப்பட்டுள்ளார்- தமிழக காங்கிரஸ்

SHARE

தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டள்ள ஆர். என். ரவிக்கு முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி

அதே நேரம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே,எஸ்,அழகரி விடுத்துள்ள அறிக்கையில் போலீஸ் பின்புலம் கொண்ட ரவியை தமிழக கவர்னராக நியமித்ததில் உள்நோக்கம் உள்ளது. முதல்வர் ஸ்டாலினுக்கு இடையூறு செய்யும் வகையில் ரவியை, மோடி அரசு கவர்னராக நியமித்து உள்ளது. தமிழக அரசியல் நடவடிக்கையை சீர்குலைக்க பா.ஜ.,வை வளர்த்தெடுக்க பகடைக்காயாக ரவி நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

வாழ்க்கை குறிப்பு

தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி (வயது 69) பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர்.

1976-ம் ஆண்டு கேரள பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரியான இவர், இந்திய உளவு அமைப்பு (ஐ.பி.) சிறப்பு இயக்குனராக பணியாற்றி 2012-ல் ஓய்வு பெற்றவர். அதன்பிறகு நாகா பயங்கரவாத அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவின் பிரதிநிதியாக மத்திய அரசு நியமித்து இருந்தது. தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி வந்த நாகா அமைப்புகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண பாடுபட்டவர்.

2018-ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நாகலாந்து கவர்னராக நியமிக்கப்பட்டார்.


SHARE

Related posts

Leave a Comment