கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பாக ஊழல் செய்வது கொலை செய்வதற்கு சமம் – உலக சுகாதார அமைப்பு

SHARE

கொரோனா நோயை காரணம் காட்டி பல நாடுகளில் ஆட்சியாளர்கள் ஊழல் செய்து வருவதாக குற்றசாட்டுகள் எழுகின்றன.

இந்தியாவில் பல மாநிலங்களில் உபகரணங்கள் வாங்குவது சிகிச்சை கட்டணங்களை அதிகமாக நிர்ணயிப்பது,அதிக செலவு கணக்குகளை காட்டுவது உள்ளிட்ட விசயங்களில் ஊழல் நடைபெறுவதாக பரவலாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

இந்த நிலையில்,பாதுகாப்பு உபகரணங்கள்  தொடர்பான ஊழல் குறித்து பேசியஉலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் , கொரோனா நோய் விசயத்தில், எந்த வகையான ஊழலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, என்றும், பிபிஇ தொடர்பான ஊழல் உண்மையில் கொலைதான் எனவும் தெரிவித்துள்ளார்.

1918 ஆம் ஆண்டின் ஸ்பானிஷ் காய்ச்சலைக் கடக்க இரண்டு ஆண்டுகள் ஆனது. ஆனால் தொழில்நுட்பத்தின் தற்போதைய முன்னேற்றங்கள் உலகம் குறுகிய காலத்தில் வைரஸை தடுக்க உதவும் என்றார். நிச்சயமாக அதிக தொடர்புகளால் வைரஸ் பரவ அதிகமான வாய்ப்பு உள்ளது.
ஆனால் அதே நேரத்தில், அதைத் தடுக்கும் தொழில்நுட்பமும், அதைத் தடுக்கும் அறிவும் நம்மிடம் உள்ளது எனவும் அவர் கூறினார்
1918-ன் கொடிய காய்ச்சல் குறைந்தது 5 கோடி மக்களைக் கொன்றது. கொரோனா வைரஸ் இதுவரை கிட்டத்தட்ட 8,00,000 மக்களைக் கொன்றுள்ளது. 2.27 கோடிக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது எனவும் டெட்ரோஸ் தெரிவித்தார்.


SHARE

Related posts

Leave a Comment