தமிழகத்தின் 8 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்திற்கு சென்றது கொரோனா பாதிப்பு

SHARE

ராமநாதபுரம், சிவகங்கை, விழுப்புரம் மாவட்டங்களில், மூன்று; அரியலுாரில், நான்கு; கள்ளக்குறிச்சியில், எட்டு; புதுக்கோட்டை, திருப்பத்துார், திருவண்ணாமலை மாவட்டங்களில், ஒன்பது என, எட்டு மாவட்டங்களில், கொரோனா தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை, ஒற்றை இலக்கமாக குறைந்தது.

இது குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,மாநிலத்தில் உள்ள, 227 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், நேற்று மட்டும், 70 ஆயிரத்து, 881 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில், சென்னையில், 353; கோவையில், 137; சேலத்தில், 97; செங்கல்பட்டில், 88; திருவள்ளூரில், 67; ஈரோடில், 46; காஞ்சிபுரத்தில், 44 என, மாநிலம் முழுவதும், 1,366 பேருக்கு, நோய் தொற்று உறுதியானது. பெரம்பலுார் மாவட்டத்தில், நேற்று யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை, 1.21 கோடி பேரிடமிருந்து, 1.24 கோடி மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதில், 7.88 லட்சம் பேருக்கு, நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரில், 1,407 பேர், நேற்று மட்டும் குணமடைந்து, வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி, சென்னையில், 3,336; கோவையில், 932; செங்கல்பட்டில், 564 பேர் என, மாநிலம் முழுவதும், 10 ஆயிரத்து, 882 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று தனியார் மருத்துவமனையில் எட்டு பேர், அரசு மருத்துவமனையில், ஏழு பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். இவர்களை சேர்த்து, இதுவரை, 11 ஆயிரத்து, 777 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


SHARE

Related posts

Leave a Comment