கொரோனா கடவுள் தந்த வரம் – ட்ரம்ப் பெருமிதம்

SHARE

தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை கடவுள் தந்த வரமாகவே கருதுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கடந்த 1-ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

டிரம்புக்கு காய்ச்சல் தீவிரமடைந்ததால் அடுத்த நாளே வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் 4 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு டிரம்ப் நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.


இந்நிலையில்,தனது உடல் நலம் குறித்து டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை கடவுள் தந்த வரமாகவே கருதுகிறேன். கொரோனாவை பற்றி முழுமையாக புரிந்துக்கொள்ள கடவுளின் மறைமுக ஆசியாகவே நினைக்கிறேன். என பதிவிட்டுட்டுள்ளார்.

கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிப்பதன் அவசியத்தை கடவுள் கற்றுக் கொடுத்துள்ளார். கொரோனாவை உருவாக்கி அமெரிக்கா மற்றும் உலகத்துக்கு பேரழிவு ஏற்படுத்தியதற்காக சீனா அதிக விலையை தர நேரிடும். இவ்வாறு அவர் தனது வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்..


SHARE

Related posts

Leave a Comment