இந்தியாவில் ‘மின்னல்’ வேகத்தில் பரவும் கொரோனா- வாடும் வடக்கு

SHARE

கொரோனா வைரஸ் தொற்று பரவல், இந்தியாவில் கடந்த சில நாட்களாக ‘மின்னல்’ வேகத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பில் உலகில் 3-ம் இடத்தில் இந்தியா உள்ளது.  
இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 78,761-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்று பாதிப்பால் 948-பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை   35,42,734-ஆக உள்ளது.  7,65,302 -பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை   27,13,934 -பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்பால் 63,498- பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.


SHARE

Related posts

Leave a Comment