இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
* புதிதாக 35,871 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,14,74,605 ஆக உயர்ந்தது.
* புதிதாக 172 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,59,216 ஆக உயர்ந்தது.
* தொற்றில் இருந்து ஒரே நாளில் 17,741 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,10,63,025 ஆக உயர்ந்துள்ளது.
*இதுவரை இந்தியாவில் 3,71,43,255 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
* கடந்த டிசம்பர் 2ம் வாரத்தில் இருந்து இதுவரை கொரோனா பாதிப்பு விகிதம் 33% அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, தற்போது மீண்டும் நாளொன்றுக்கு 800 பேரை தாண்டி இருக்கிறது