வாணியம்பாடி அருகே கொரானா நோயாளி ஒருவர் உயிரிழந்த தாயின் உடலை பார்க்க மன்றாடி அனுமதி பெற்று பாதுகாப்பு உடை அணிந்து தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பாப்பா நேரி பகுதியை சேர்ந்தவர் மின்னல் வயது 75 .இந்நிலையில் உடல் நலிவுற்று வந்த மின்னல் நேற்று உயிரிழந்தார். இவரது மகன் முருகேசன் கொரோன சிகிச்சையில் உள்ளார்.
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை. பெருபவரை சிகிச்சை காலம் முடியும் வரை வெளியே அனுப்புவதில்லை இருப்பினும் தனது தாய் இறந்த தகவலறிந்த முருகேசன் கடைசியாக தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த அனுமதி வேண்டும் என்று அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளிடம் மன்றாடி உள்ளார்.இது குறித்து மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் வருவாய் துறையினர் பாதுகாப்பு கவச உடை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்த அழைத்து சென்றுள்ளனர் . கொரோனா பாதுகாப்பு கவச உடை அணிந்து வந்து தனது தாயின் உடலை பார்த்து கதறி அழுத முருகேசன் இறுதி அஞ்சலி செலுத்திய சம்பவம் அப்பகுதியில் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.