விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி

SHARE

பிரபல நடிகரும் தே.மு.தி.க., தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.இருந்த போதும் அவரது உடல் நிலை சீராக உள்ளது என்றும் மருத்துமனை தலைவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் கட்சி பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதில்லை. தொடர்ந்து ஓய்வில் இருந்து வந்த அவருக்கு கொரோனா பாதிப்பு என்ற தகவல் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது..


SHARE

Related posts

Leave a Comment