இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு 2-வது நாளாக 16 ஆயிரத்தை தாண்டியது

SHARE

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்புகள் சமீப காலமாக குறைந்து வந்தது ஆனால் தற்போது கடந்த சில தினங்களாக புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,577 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,10,63,491ஆக அதிகரித்துள்ளது.

தொற்று பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 120 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,56,825 ஆக உயர்ந்துள்ளது. 
இந்தியாவில் இன்று ஒரே நாளில் 12,179 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,07,50,680 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு 1,55,986 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது வரை 1,34,72,643 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


SHARE

Related posts

Leave a Comment