தீவிரமாகும் கொரோனா பாதிப்பு-கேரளா அதிர்ச்சி.

SHARE

பாராட்டப்பட்டகேரளா.பாதிப்பு அதிகரிப்பு

UMAPATHY KRISHNAN

கடந்த பிப்ரவரி மாதம் நாட்டிலேயே முதல் கொரோனா நோயாளி கேரளாவில் கண்டறியப்பட்டார்.அதுவும் வெளிநாட்டில் இருந்து வந்தவர் அவர்.

தீவிர சிகிச்சைக்கு பின்னர் அவர் குணமானார். பின்னர் நாடு முழுவதும் கொரோனாவின் கோர பிடி இறுகிய நிலையிலும் கேரள மாநில அரசு ஊரடங்கு மூலம் அதனை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. பாரம்பர்ய மருத்துவ முறைகளை கையான்டதால் பலி எண்ணிக்கையும் சொற்பமானது.

கேரளாவில் வீடுகளின் அமைப்பு ,அந்த மாநில கலாச்சார மற்றும் பூகோல அமைப்பின் படி பிற மாநிலங்களை போல நெருக்கமாக இருக்காது. இந்த அமைப்பும் கொரோனா பரவலை தடுக்க பெரிதும் உதவியது.

பின்னர் அண்டை மாநிலமான தமிழகத்தில் கொரோனா மெல்ல தனது கோர முகத்தை காட்டியது.

மகாராஷ்ட்டிர மாநிலம் மும்பையில் அதி தீவிரமாக நோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்தது. அதே நேரம் கேரளாவில் 2 இலக்கங்களிலேயே நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தது..

இதனால் பினராயி விஜயன் அரசுக்கு அரசியல் ரீதியான நல்ல பெயரை உருவாக்க பல முயற்சிகள் நடந்தன. உண்மையிலேயே பலரால் அவர் பாராட்டப்பட்டார்.

ஆனால் சீனா, தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளை தவிர பிற நாடுகளில் லாக்டவுன் விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு கொரானா பரவல் முன்னை விட அதிகரித்ததை கண் கூடாக கான முடிந்தது.

இந்தியாவை பொறுத்தவரை டெல்லி , மும்பை மற்றும் தமிழகம் முதலில் முன்னனியில் இருந்தாலும் ,சில தளர்வுகளை அறிவித்த பின்னர் கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் அதி வேகமாக பரவியது நோய் தொற்று.

தற்போது தளர்வுகளுக்கு பின்,கேரளாவில் பீதியை அதிகரித்து வருகிறது கோவிட் 19.கேரளாவில் இன்று ஒரே நாளில் 3,349 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

அங்கு கொரோனா சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 26,229 ஆக உயர்ந்துள்ளதால்.அந்த மாநில அரசு கலக்கம் அடைந்துள்ளது.

பொதுவாக உலக அளவில் கொரானா குறித்த பதிவுகளை ஆய்வு செய்தால், என்ன கட்டுப்பாடுகள் விதித்தாலும் பொது பரவலாக பரவி தான் கொரோனா ஒரு கட்டுப்பாட்டிற்குள் வந்திருக்கிறது.

அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல என்ற போதும் மாநில வாரியாக பார்த்தால், முன்பு அதிகம் இருந்த மாநிலங்களில் நோய் தொற்று குறைந்து வருவதும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறைவாக காணப்பட்ட மாநிலங்களில் தற்போது நோய் தொற்று வெகுவாக அதிகரித்து வருவதையும் கண் கூடாக காண முடிகிறது.


SHARE

Related posts

Leave a Comment