தமிழகத்தில் நாளுக்கு நாள் மிக வேகமாக பாதிப்பு உயர்ந்து வருகிறது. அந்தவகையில் இன்று ஒரே நாளில் 19,588 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிகளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. இன்று உயிரிழந்தவர்களில் 114 பேர் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களாவர். எவ்வித பாதிப்பும் இல்லாதவர் 33 பேர்.
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்புகள் 4 லட்சம் எண்ணிக்கையை இன்று கடந்து அதிர்ச்சி அளித்து உள்ளது.
இதுபற்றி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 4 லட்சத்து ஓராயிரத்து 993 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 1 கோடியே 91 லட்சத்து 64 ஆயிரத்து 969 ஆக உயர்வடைந்து உள்ளது.
நாட்டில் 3,523 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,11,853 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 988 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 56 லட்சத்து 84 ஆயிரத்து 406 ஆக உயர்வடைந்து உள்ளது. இதுவரை மொத்தம் 32,68,710 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 15 கோடியே 49 லட்சத்து 89 ஆயிரத்து 635 ஆக உள்ளது என்று தெரிவித்து உள்ளது. நாட்டில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சம் கடந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.