கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல்-தேவையற்ற இழுத்தடிப்பு செய்கிறது ஐ.நா. ?

SHARE

இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி வழங்குவது தொடர்பாக  ஐ.நா சபையின் ஆலோசனை குழு  அக்டோபர் 26ம் தேதி கூடுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா சபையின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் “ஐ.நா சபை கோவாக்சின் தடுப்பூசியுடன்  மிக நெருக்கமாக பயணித்து வருகிறது. எங்கள் நோக்கம் அதிகமான தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்குவது. அதன்மூலம், அதிக மக்களுக்கு தடுப்பூசி கிடைக்க செய்ய முடியும்” என்றார்.
கடந்த செப்டம்பர் 27ம் தேதி கோவாக்சின் தரப்பில்  கூடுதல் தரவுகள் அளிக்கப்பட்டது.ஐ.நா சபையின் நிபுணர்கள் அவற்றை ஆராய்ந்து வருகின்றனர்.அவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் அதில் விடைகள் இருப்பின் அடுத்த வாரம் இறுதி முடிவு கிடைக்கும் என்று ஐ.நா சபையின் டுவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
விரைவில் இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி கிடைக்கும் என்பது இதன்மூலம் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

இருந்த போதிலும் இந்தியாவில் பல கோடி மக்களுக்கு செலுத்தப்பட்டு நேரடி சோதனையே செய்து முடித்த பிறகு ஐநா தோவையற்ற கேள்விகளை கேட்டு இழுத்தடிப்பு செய்து வருவதாக சர்வதேச பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


SHARE

Related posts

Leave a Comment