கோவிட் பாரம்பர்ய மருந்துக்கு ஆந்திர அரசு ஒப்புதல்

SHARE

ஆந்திராவில், கோவிட் நோயாளிகளுக்கு ஆனந்தய்யா என்ற மருத்துவர் வழங்கிய ஆயுர்வேத மருந்துக்கு அம்மாநில அரசு ஒப்புதல் அளித்தது.
ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணபட்டணத்தை சேர்ந்த ஆனந்தய்யா என்ற ஆயுர்வேத மருத்துவர், கொரோனாவுக்கு மருந்து தயாரித்து நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கி வந்தார். இதனை பெறுவதற்கு தினமும் ஆயிரகணக்கானோர் குவிந்தனர். சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் வரிசையில் நின்று மருந்தை பெற்று சென்றனர். இதையடுத்து, மருந்து விநியோகத்தை நிறுத்திய மாவட்ட கலெக்டர், மருந்தை சோதனைக்காக அனுப்பி வைத்தார்.


இந்த மருந்தை ஆயுஷ் அமைச்சகம் மற்றும் திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத நிபுணர்கள் ஆய்வு நடத்தினர். இதில் பக்க விளைவு ஏதும் இல்லை என நிரூபணம் ஆனது. இதனையடுத்து இந்த மருந்துக்கு ஆந்திர அரசு ஒப்புதல் வழங்கியது. ஆனால், கண்ணில் விடப்படும் சொட்டு மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


SHARE

Related posts

Leave a Comment