இந்தியாவில் 24 மணிநேரத்தில் 83 ஆயிரம் பேருக்கு கொரோனா

SHARE

இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 83,341 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஒரே நாளில் கொரோனாவுக்கு 1.096 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 67,376லிருந்து 68,472 ஆக உயர்ந்துள்ளது.  இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.75% குணமடைந்தோர் விகிதம் 77.09% ஆக உள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 66,659 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 29.70 லட்சத்தில் இருந்து 30.37 லட்சமானது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 38,53,406ல் இருந்து 39,36,747 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்த 8.31 லட்சம் பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11.69 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 4.66 கோடி மாதிரிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.


SHARE

Related posts

Leave a Comment