ஒரு மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை: கோவிராப்’- பிற்கு அனுமதி

SHARE

 கரக்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ள பரிசோதனைக் கருவியான ‘கோவிராப்’- பிற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி வழங்கியுள்ளது. 


எளிய முறையில், குறைந்த கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் இந்த பரிசோதனையின் முடிவுகளை ஒரு மணி நேரத்தில் செயலியின் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம். கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தின் மற்றொரு முக்கிய வளர்ச்சியான இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.


இந்தப் புதிய கண்டுபிடிப்பின் வாயிலாக ரூபாய் 500 கட்டணத்தில் தரமான மற்றும் துல்லியமான கோவிட் பரிசோதனைகள் சாமானிய மக்களையும் சென்றடைந்துள்ளது,
கரக்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகம் தெரிவித்தவாறு, ரூபாய் 10 ஆயிரத்துக்கும் குறைவாக, தொழில்நுட்ப வசதிகளுடன் இந்தக் கருவி தயாரிக்கப்பட்டிருப்பது, சாமானிய மக்களுக்கும் தொழில்நுட்பம் கிடைக்க வழிவகை செய்துள்ளது. இந்தக் கருவியைப் பயன்படுத்தி ஒரு மணி நேரத்தில் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும்.


SHARE

Related posts

Leave a Comment