தடுப்பூசி விலை ரூ.1,000 – வெளிசந்தையில் விற்க சீரம் நிறுவனம் முடிவு

SHARE

கொரோனா தடுப்பூசி வெளிச்சந்தையில் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என கோவிஷீல்டு தடுப்பூசியை உருவாக்கிய சீரம் நிறுவனத்தின் தலைவர் அடர் பூனவாலா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், சீரம் நிறுவனம் உருவாக்கியுள்ள கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள கோவாக்சின் தடுப்பூசியை பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. வரும் 16 ம் தேதி தடுப்பூசி போடும் பணி துவங்க உள்ளது. இதற்காக மாநிலங்களுக்கு தடுப்பூசி அனுப்பும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் சீரம் நிறுவனத்தின் தலைவர் அடர் பூனவாலா செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களது தொழிற்சாலையில் இருந்து, தடுப்பு மருந்து விநியோகம் செய்யப்பட்ட தருணம், வரலாற்று சிறப்புமிக்கது.

அரசின் வேண்டுகோளுக்கு ஏற்ப, முதல் 100 மில்லியன் டோஸ்கள் மட்டும் ரூ.200 என்ற சிறப்பு விலையில் வழங்கியுள்ளோம். சாமான்ய மனிதன், எளிதில் பாதிக்கப்படக்கூடிய மற்றும் ஏழை மக்கள், சுகாதார பணியாளர்களுக்கு உதவ நாங்கள் விரும்புகிறோம். வெளிச்சந்யைில் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.


அரசை பொறுத்த வரையில், ரூ.200 என்ற விலையில் தான் வழங்கியுள்ளோம். லாபம் பார்க்க விரும்பவில்லை. முதல் 100 மில்லியன் டோஸ்களுக்கு, இதன் மூலம் நாட்டையும், மத்திய அரசையும் ஆதரிக்க விரும்புகிறோம். சீரம் நிறுவனத்தில் இருந்து, மருந்துகளை அனுப்பும்படி, எங்களுக்கும், பிரதமர் அலுவலகத்திற்கும் பல நாடுகளில் இருந்து கடிதம் வந்துள்ளது.

ஆப்ரிக்கா மற்றும் தென் ஆப்ரிக்கா நாடுகளுக்கும் தடுப்பூசி விநியோகம் செய்ய விரும்புகிறோம்.
ஒவ்வொரு மாதமும் 70 – 80 மில்லியன் டோஸ்கள் தயாரிக்கிறோம். இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு எப்படி அனுப்பி வைப்பது என ஆராய்ந்து வருகிறோம் என்றார்.


SHARE

Related posts

Leave a Comment