குறைந்த விலையில் கச்சா எண்ணெய்: இந்தியா- ரஷியா ஒப்பந்தம்

SHARE

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியாவுக்கு எதிராக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதனால் ரஷியாவின் பொருளாதாரம் அடி வாங்கி உள்ளது.மற்றொரு பக்கம் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில், இந்தியாவுக்கு ரஷியா சலுகை விலையில் 30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் வழங்க முன்வந்தது. 

இந்த நிலையில், அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடம் மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இந்தியா இறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மலிவு விலை கச்சா எண்ணெய் விரைவில் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா தனது எரிசக்தித் தேவைகளில் 80 சதவீதத்திற்கும் மேலான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதையே பெரிதும் நம்பியுள்ளது.


SHARE

Related posts

Leave a Comment