அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் சகோதரி மேரி ஆன் தமது சகோதரர் டொனால்டு டிரம்ப் கொடூரமானவர், கொள்கையற்றவர் என பேசியுள்ள ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்ப் குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற டிரம்பின் மருமகள் மேரி டிரம்ப் என்பவரிடம் 2018 காலகட்டத்தில் மேரி ஆன் ட்ரம்ப் குறித்த அதிர்ச்சியூட்டும் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த உரையாடலை மேரி டிரம்ப் பதிவு செய்து பாதுகாத்து வந்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் பொறுப்பான ஒரு பதவியில் இருந்து கொண்டு நாளுக்கு நாள் டிரம்ப் பொய் பேசுவதாகவும், அவருக்கு கொள்கை என்பதே இல்லை எனவும் மேரி ஆன் காட்டமாக தெரிவித்துள்ளார். உலகின் கொடூரமான மனிதனை என் குடும்பம் எப்படி உருவாக்கியது என டிரம்பை குறிவைத்து மேரி டிரம்ப் பேசியுள்ளார்.
இந்த ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த ஆடியோ குறித்து வெள்ளை மாளிகை எந்த கருத்தையும் வெளியிடவில்லை.