வங்கக் கடலில் 24 மணி நேரத்தில் நிவர் புயல் உருவாகும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 24 மணி நேரத்தில் புயலாக வலுப் பெறும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தற்போது சென்னையிலிருந்து தென் கிழக்கு திசையில் 740 கி.மீ மையம் கொண்டிருக்கும் புயலுக்கு ‛நிவர்’என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்புயல் நாளை மறுநாள் நவ.,25ம் தேதி பிற்பகலில் மாமல்லபுரத்திற்கும் காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் கரை கடக்கும் நேரத்தில் மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் புயல்காற்று வீசும்.
புயல் காரணமாக சென்னை, புதுச்சேரி மற்றும் கடலோர மாவட்டங்களில் . மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது