தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடு.

SHARE

நவம்பர் 14ம் தேதி தீபாவளி பண்டிகை.. தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக மக்கள் அனைவரும் மாசில்லா தீபாவளியைக் கொண்டாடும்படி அறிவுறுத்தியுள்ளார்.

உலகிலேயே கலர்புல்லான பண்டிகை என வர்ணிக்கப்படும் தீபாவளி பண்டிகை தற்போது மிகுந்த கட்டுப்பாடுகளுடன் கொண்டாடும் வகையில் வரையரைக்கு உட்படுத்தப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு வெடிப்பது தொடர்பாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


SHARE

Related posts

Leave a Comment